Saturday, March 22, 2008

விலை மாது

முப்பத்தி ஐந்து வயதில்
மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும்
என் மனதும், உடலும்...

இருவதுகளிலே அதை செய்ய
ஏன் முன் வருவதில்லை !!

ஒருவேளை
உடல் நோகாமல் சம்பாதிப்பது
மனதோடு ஒட்டிவிட்டதோ !!!

மலரும் நினைவுகள் - இது நிஜமா?

என் சிறுவயதில் படித்த இந்த தமிழ் பாட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஞாபகம் வரும்:

"வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேழங்கள்
இறங்கி வரும் தாழங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
தின்னையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவழை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகந்த வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை"

வருடங்கள் உருண்டோடி விட்டதால் (70-வதுகளில் படித்தது என்று நினைகிறேன்), மறதியின் காரணமாக சில இடங்களில் தவறுகள் இருக்கலாம்...

Friday, March 21, 2008

உலகம்

ஒருவன் இல்லாதிருப்பதை இருப்பதாக்குகின்றான்

மற்றொருவன் இருப்பதை இல்லாதாக்குகின்றான்

இவ்விருவரையும் பார்த்து, உமிக்கரியால் பல்லை தேய்த்துக் கொண்டே

வாய் விட்டு சிரிக்கின்றான் இந்த மாயாண்டி !

உரிமை

இடைகாட்டி உடைபோட உரிமையுண்டு
ஆனால்
அதை எடைபோட விடலைக்கு உரிமையில்லையே!

புகை இலை

ஒருவன் எலும்பு கூட்டை காட்டுகின்றான்

மற்றொருவன் எலும்பும் தோலுமாக இருக்கும் தன் குழந்தையை காட்டுகின்றான்

ஒருவன் புதிதாக முளைத்த செல்களை காட்டுகின்றான்

மற்றொருவன் செல்களே முளைக்காத தன் வரண்ட வயிற்றை காட்டுகின்றான்

யாருக்காக அழுவது !!!

எல்லாம் மாயை !!!

இறந்தோர் அறியவில்லை
இருப்போர் அறியார்
வருபோர் அறிவாரோ

எல்லாம் மாயை !!!