உணர்வுகள் ஆயிரம் கூடிய உன் கயல்விழிகள்
பல கதைகள் கூறிச் சென்றன
குயில்கள் வெட்கி குனியும் உன் இனிய குரல்
உசுப்பேத்திவிட்டன
தூரிகை பிடித்து பல வண்ணம் தீட்டிய உன் விரல்கள்
என் கைகளில் கஜுராஹொ சிற்பங்களும் தீட்டின
உன் கைபேசி மின்னஞ்சல்கள்
என் உறக்கத்தை கலைத்தன
ஏய் பெண்ணே!
இங்ஙனம் அன்பு இம்சைகள் தொடுக்கும் நீ
உன்னை எப்போழுது "முழுமையாக" கொடுக்கபோகிறாய்?
Showing posts with label எல்லாம் மாயை. Show all posts
Showing posts with label எல்லாம் மாயை. Show all posts
Tuesday, February 10, 2009
Tuesday, January 20, 2009
திருமங்கலம் இடைத்தேர்தல்
எதிரியின் புறமுதுகு மட்டுமே கண்டு ஆர்பரித்த மண்
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?
உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?
உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது
எங்கே செல்லும் இந்த பாதை...
கேவலம் சில நோட்டுகளுக்காக முதுகு சொரிய பணிந்ததேன்?
உன்னை இனி வீர மறவர் என்றழைப்பதா?
அல்லது கோழை சொரியர் என்று எள்ளி நகையாடுவதா?
உன் கேவலமான இச்செயல்
தமிழ் நாட்டின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது
எங்கே செல்லும் இந்த பாதை...
Monday, September 15, 2008
மதமாற்றம்
ஒரு மூடன்
மற்றொரு மூடனை
ஒரு மூட நம்பிக்கையிலிருந்து
மற்றொரு மூட நம்பிக்கைக்கு
மாற்றுகின்றான்...
இதில்
லாப நஷ்ட கணக்கு ஏன் பார்கிறான்?
மூன்றாவது மூடன் !!
மற்றொரு மூடனை
ஒரு மூட நம்பிக்கையிலிருந்து
மற்றொரு மூட நம்பிக்கைக்கு
மாற்றுகின்றான்...
இதில்
லாப நஷ்ட கணக்கு ஏன் பார்கிறான்?
மூன்றாவது மூடன் !!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
எல்லாம் மாயை,
மதமாற்றம்,
மூட நம்பிக்கை
Tuesday, April 15, 2008
உள்குத்து-வெளிக்குத்து !!!
உமிக்கரியால் பல் தேய்த்த என்னை
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்
சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்
தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்
இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்
கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்
இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்
இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"
இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!
நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்
சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்
தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்
இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்
கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்
இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்
இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"
இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!
நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!
Labels:
ellaam maayai,
ellAm mAyai,
உள்குத்து,
எல்லாம் மாயை,
நாத்திகம்,
விற்பனையாளர்கள்
Subscribe to:
Posts (Atom)
