Wednesday, April 23, 2008

மூடநம்பிக்கை

கதாசிரியன் சினிமாவிற்கு கதை எழுதினான்!

மதம் என்று பெயரிட்டான்
நாயகன் பெயர் கடவுள்
வில்லன் பெயர் பேய்
மூடநம்பிக்கை என்ற மசாலா பாட்டு

படம் "சாதனை" படைத்துக்கொண்டிருக்கிறது !!!


பி.கு: மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் 'கலர்' துண்டு போடுகிறார்கள் என்று 'என்னிடம்' கேக்காதீர்!!

Tuesday, April 15, 2008

உள்குத்து-வெளிக்குத்து !!!

உமிக்கரியால் பல் தேய்த்த என்னை
டூத்பேஸ்ட்டிற்கு மாற்றினாய்

சீயக்காய் தேய்த்த என் தலையை
ஷேம்புவிற்கு மாற்றினாய்

தேங்காய் நார் தேய்த்து கழுவின என் உடம்பை
சோப்புவிற்கு மாற்றினாய்

இளநீரும் பதனீரும் குடித்த என்னை
கோலா குடிக்க மாற்றினாய்

கள்ளு அடித்த என்னை
பியர் குடிக்க மாற்றினாய்

இயற்கையை மதித்த என்னை
இல்லாததை கும்பிட மாற்றினாய்

இங்ஙனம் என் பாரம்பரியத்தை
நிரந்தரமாக மாற்றிகொண்டிருக்கும்
"விற்பனையாளனே"

இது உன் குற்றமா?
அல்லது
இங்ஙனம் மாறிகொண்டிருக்கும்
மனிதர்கள் குற்றமா?
யார் குற்றமானால் என்ன!!

நான் ஆட்சிக்கு வந்தால்
உன்னையும், மாறிய மக்களையும்
கழுவிலேற்றி விட்டு
மக்கள் 'இல்லா' ஆட்சி புரிவேன் !!!

Tuesday, April 1, 2008

விலை மாது

பூமியின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத நீ

மற்ற 99 சதவீத மக்களையும் வாழவைக்கும் இந்த வற்றாத பூமி

உன்னையும்

உடலை விற்காமல் வாழ, வழி வகுக்கும் என்பதை

ஏன் உணராமல் போனாய்!